43. அருள்மிகு ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்
மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன்
உத்ஸவர் கள்ளப்பிரான்
தாயார் வைகுண்டவல்லி, பூதேவி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி
விமானம் சந்திர விமானம்
மங்களாசாசனம் நம்மாழ்வார்
இருப்பிடம் ஸ்ரீவைகுண்டம், தமிழ்நாடு
வழிகாட்டி திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் பாதையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
தலச்சிறப்பு

Srivaikuntamஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு பிரம்மதேவரது சத்தியலோகம் எங்கும் நீர் சூழ்ந்துக் கொண்ட நேரத்தில், சோமுகாசுரன் என்னும் அசுரன் சிருஷ்டி ஞானத்தை அபகரித்துக் கொண்டு சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, பிரம்மன் தாமிரபரணி நதிக்கரையில் சோலைகள் நிறைந்த இந்த ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து தவமிருந்தான். பகவான் ப்ரத்யக்ஷமாகி அசுரன் அபகரித்த சிருஷ்டி ஞானத்தை மீட்டுக் கொடுத்ததாக வரலாறு. பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க, மகாவிஷ்ணு வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் அதே கோலத்தில் இங்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் இந்த க்ஷேத்ரம் 'ஸ்ரீவைகுண்டம்' என்று பெயர் பெற்றது.

Srivaikuntamமூலவர் ஸ்ரீவைகுண்டநாதன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் கள்ளப்பிரான். தாயார் வைகுண்டவல்லி என்று வணங்கப்படுகின்றார். இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள். பிருகு முனிவர், இந்திரன் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.

காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியவற்றில் பாதியை வைகுண்டநாதனுக்கு ஸமர்ப்பணம் செய்து வந்தான். ஒரு சமயம் அரண்மனையில் திருடும்போது அவர் பிடிபட்டான். திருடன் வைகுண்டநாதனை வேண்ட, பகவான் ப்ரயத்க்ஷமாகி இருவருக்கும் நட்பு உண்டாக்கி மறைந்தார். அதனால் இந்த ஸ்தலத்து உத்ஸவர் 'கள்ளப்பிரான்' என்ற திருநாமம் பெற்றார்.

ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

நம்மாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com